Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிரித்தலை முகாமில், இரகசிய சித்திரவதைக் கூடங்கள்

கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்ள ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் கிரித்­தலை முகாமில், இர­க­சிய சித்­தி­ர­வதைக் கூடங்கள் இயங்கி வந்­துள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. கண்டி மேல் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்டு வரும் வழக்­கொன்­றி­னூ­டா­கவும், எக்­னெ­லி­கொட தொடர்பில் கைதா­கி­யுள்ள இரா­ணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் உள்­ளிட்ட 7 பேரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசேட விசா­ர­ணைகள் ஊடா­கவும் இந்த சித்­தி­ர­வதை கூடம் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
இந்நிலையில் ஊட­க­வி­ய­லாளர் எக்­னெ­லி­கொட தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணைகள் மேலும் விரிவு படுத்­தப்­ப­டலாம் எனவும் எதிர்­வரும் நாட்­களில் குறித்த கிரித்­தலை முகா­முக்கு விஷேட புல­னாய்வுப் பிரிவின் குழு­வொன்று சென்று நேர­டி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கலாம் என பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இது தொடர்பில் தற்­போது பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் 7 சந்­தேக நபர்கள் வெளி­யிடும் தக­வல்­க­ளுக்கு அமைய நீதி­மன்றம் ஊடாக விசேட அனு­ம­தி­யொன்று பெறப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம் எனவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­க­ரவை தொடர்­பு­கொண்டு வின­விய போது, எக்­னெ­லி­கொட விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்ந்து இடம்­பெ­று­வ­தா­கவும் கிரித்­தலை முகாமை சோத­னைக்கு உட்­ப­டுத்­து­வதோ அல்­லது அங்கு சென்று விசா­ரணை செய்­வது குறித்தோ தற்­போ­தைக்கு எந்த முடிவும் இல்லை எனவும் இது தொடர்பில் விசா­ர­ணை­களின் நிறைவில் முழு­மை­யான தக­வல்­களை தன்னால் வெளி­யிட முடி­யு­மாக இருக்கும் எனவும் தெரி­வித்தார்.
எவ்­வா­றா­யினும் இது­வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், பிரகீத் எக்­னெ­லி­கொட ராஜ­கி­ரி­ய­வி­லி­ருந்து கடத்­தப்­பட்டு கிரித்­தலை முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளதும் அங்கு அவர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.
கடத்­தப்­பட்டு நான்கு நாட்­களில் அப்­போது கிரித்­தலை முகா­முக்கு பொறுப்­பாக இருந்த தற்­போது புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ள அதி­கா­ரி­க­ளினால் அவர் அந்த முகாமில் இருந்து அழைத்துச் சென்­றுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.
இந் நிலை­யி­லேயே எக்­னெ­லி­கொட கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்கும் புல­னாய்வுப் பிரிவு கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் 7 பேரையும் தொடர்ந்தும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது.
அப்­போ­தைய கிரித்­தலை முகா­முக்கு பொறுப்­பான அதி­காரி லெப்­டினன் கேர்ணல் சம்மி குமார ரத்ன, லெப்­டினன் கேர்ணல் சிறி­வர்­தன, ஸ்டாப் சார்ஜன்ட் ராஜ­பக் ஷ, கோப்ரல் ஜயலத் ஆகி­யோ­ருடன் முன்னர் கைது செய்­யப்­பட்ட ஓய்வு பெற்ற சார்ஜன்ட் மேஜர் ரண்பண்டா மற்றும் விடு­தலை புலி­களின் ‘டொசி’ என அறி­யப்­படும் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்­பி­னர்­களும் புனர்­வாழ்­வளிக்­கப்­பட்ட பின்னர் இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளு­மான இரு­வ­ரையும் புல­னாய்வுப் பிரிவு தொடர்ந்தும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

Post a Comment

0 Comments