இரயில் நிலையத்தில் காத்திருந்த ஒரு நபர் மற்றோரு நடைமேடையில் இருந்த ஒருவரை நோக்கி கூப்பிட்டுள்ளார்.
பின்னர் திடீரென தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயற்சி செய்துள்ளார்.
உடனே இதனை பார்த்த ஒருவர் அவரை தண்டவாளத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டுள்ளார்.
அவர் மேலும் தண்டவாளத்துக்கு செல்லாமல் இருக்க அவரை கட்டுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த காட்சியை எதிர் நடைமேடையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். மேலும் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் குடித்து இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
நியூசிலாந்தின் காண்டர்பெரி பகுதியில் உள்ள மிட்சம் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


0 Comments