Home » » அனுதாபத்தை பெற மகிந்தவின் சூழ்ச்சி அம்பலம்

அனுதாபத்தை பெற மகிந்தவின் சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றில் அவரது தரப்பினராலேயே குண்டு தாக்குதலை நடத்த செய்து, மக்களின் அனுதாபத்தை பெற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாகவே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு பழிவாங்கும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் கூட்டத்தின் மீது ரவி கருணாநாயக்க தரப்பினரால், குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜபக்ச தரப்பினர் கதையை ஜோடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் பெயர் குறிப்பிடவிரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பான இரகசியமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 29 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில் நடந்துள்ளது.
அந்த கலந்துரையாடலில், முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர்.
குண்டு தாக்குதல் திட்டத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், தபால், வைத்தியசாலை மற்றும் போக்குவரத்து துறைகளில் பணிப்புறக்கணிப்புகளை ஆரம்பித்து, வழமையான நடவடிக்கைகளை சீர்குலைப்பது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர நாட்டில் இனவாதத்தை தூண்டுவது எனவும், அந்த பணிகளை ராவணா பலய அமைப்பிடம் ஒப்படைப்பது என்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கப்படும் நாளான  எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு பெயர் முகவரிகள் அற்ற இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகளை ஒட்டவும் ராவணா பலய அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த சுவரொட்டியில் ரணில் விக்ரமசிங்க நாட்டை பிரிக்க போகிறார் என்று மக்கள் பயமுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகளை அச்சிடும் பொறுப்பு, டளஸ் அழகப் பெருமவின் முன்னாள் ஊடக இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிக்கு இணையாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி பிரதேசங்களில் சிங்கள விரோத இனவாத சுவரொட்டிகள் ஒட்டப்பட வேண்டும் எனவும் அப்போதே தென் பகுதியில் இனவாதத்தை தூண்ட முடியும் எனவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |