Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் மற்றுமொரு அதிரடி! சந்திரிக்கா உள்ளிட்ட 13 பேர் மத்தியக் குழுவில் நியமனம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் 13 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக அந்தக் கட்சியின் ஆலோசகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட 13 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியிலுள்ள அதிகாரங்களுக்கமைய கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய அர்ஜூன ரணதுங்க, ஹிருனிகா பிரேமச்சந்திர, மகிந்தானந்த அளுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஜின்வாஸ் குணவர்தன, பசில் ராஜபக்ச, டிலான் பெரேரா ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலான சந்திரிக்கா குமாரதுங்க, விஸ்வா வர்ணபால உள்ளிட்ட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Post a Comment

0 Comments