கல்வித் துறையில் இருந்து அரசியல் துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளேன் முடிந்தவரை நேர்மையாக அரசியல் செய்ய நினைக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
காக்காச்சிவட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
முப்பது வருடம் கல்வித் துறையில் இதயசுத்தியுடன் கறைபடியாத கரங்களுடன் சேவை செய்துள்ளேன் அரசியல் துறையிலும் அவ்வாறு இதயசுத்தியுடனும் சுத்தமான கையுடனும் நேர்மையாக நேர்மையாக அரசியல் செய்து மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கின்றேன்.
முப்பது வருடம் கல்வித் துறையில் இதயசுத்தியுடன் கறைபடியாத கரங்களுடன் சேவை செய்துள்ளேன் அரசியல் துறையிலும் அவ்வாறு இதயசுத்தியுடனும் சுத்தமான கையுடனும் நேர்மையாக நேர்மையாக அரசியல் செய்து மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கின்றேன்.
என்னிடம் பலரும் அரசியலுக்கு வரும்படி நீண்ட காலமாக கோரிவந்தனர் நான் அரசியல் வாத்தியாகவே இருக்க விரும்புகிறேன் அரசியல் வாதியாக வரவில்லை என்று கூறியிருந்தேன். னால் இந்தத் தேர்தலில் இறங்கியே ஆக வேண்டும் என பொது அமைப்புக்களும் புத்திஜீவிகளும் இளைஞர்களும், புலம்பெயர் சமூகமும் வற்புறுத்தியதற்கமையவே அவர்களது அ யோசித்தேன் இதற்குப் பின்னரும் நான் இவர்ளின் கருத்துக்கு செவிசாய்க்காவிட்டால் சுயநலவாதியாகிவிடுவேன் என்ற காரணத்pனாலேயே காலத்தின் கட்டாயத்தினை உணர்ந்து இறங்கியுள்ளேன்.
எனது அரசியல் பிரவேசத்தை மக்கள் வரவேற்பதாகவே உணர்கிறேன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வரவேற்கின்றனர். நான் கல்வித் துறையில் 30 வருடம் இதயசுத்தியுடன் கறைபடியாத கையுடன் எவ்வாறு சேவை செய்தேனோ கல்வித துறையில் இருந்து அரசியல் துறைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நான் அரசியலிலும் உண்மைக்கு உண்மையாக நேர்மையாக அறிவு பூர்வமாக நேர்மையான அரசியல் செய்து மக்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கின்றேன்.
30 வருடகால யுத்தத்தினால் அனைத்தையும் இளந்தது மாத்திரமன்றி வடகிழககில் எண்பத்தொன்பதனாயிரம் விதவைகளையும் உருவாக்கியுள்ளது.இ;தனைக்கும் மத்தியில் எமது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை மீள்கட்டுமானப் பணிகள் இடம்பெறவில்லை அவற்றை ஏற்படுத்துவதற்கும் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
30 வருடகால ஆயுத ரீதியான எமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டாலும் இராசதந்திரப் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.இராசதந்திர ரீதியாக எமது போராட்டத்தை வலுவடையச் செய்யவேண்டிய காலகட்டத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்த இத் தேர்தலின் ஊடாக அதற்கான ஆணையினை மக்களே வழங்க வேண்டும்.அதற்காக தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மக்களின் ஒரே கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அன்றி பேரினவாதக் கட்சிக்கு வாக்களிப்பதனுடாக எமது ஆசணங்களை இளக்க வேண்டி ஏற்படும் நிச்சயமாக பேரினவாதக் கட்சிக்கு வாக்களிப்பதனுடாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படமாட்டார் என்பது மாத்திரம் உண்மை எனவும் தெரிவித்தார்.


0 Comments