முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை திட்டமிட்ட வகையில் உளவியல் ரீதியாக தாக்கும் நடவடிக்கைகள் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு அரசியலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், தனது மூன்றாவது ஜனாதிபதி தேர்தலை நடாத்தியிருந்தார்.
ஜோதிடரின் கணிப்பை ஏற்று, அதன்படி தேர்தலை நடாத்தி, சற்றும் எதிர்பாராத விதமாக ஆட்சிப்பீடத்தில் இருந்து இறங்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், அலரிமாளிகையில் இருந்து தை மாதம் 8ம் திகதி அம்பாந்தோட்டைக்கு சென்ற அவர், அன்றைய நாளில் இருந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாகவும், தனது குடும்பத்தில் உள்ளவர்களோடே சரியான முறையில் பேசாமலும், தனிமையிலும் இருந்துள்ளார்.
மனதளவால் உடைந்து போன அவர், தன்னை திட்டமிட்டு வீழ்த்திவிட்டார்கள் என்று அடிக்கடி புலம்பிக்கொண்டும் இருந்திருக்கின்றார்.
அப்படி புலம்பிய மகிந்த, தனது சொந்த சகோதரர்கள் மீதும் தன் கோபத்தை காட்டியுள்ளார். கோத்தபாய ராஜபக்சவிடம் நீ தான் நான் தோற்றுப்போக காரணம் என்றும் கடிந்திருக்கின்றார்.
நாளாக நாளாக அவரை தேற்றும் நடவடிக்கைகளில் குடும்பத்தாரும், கட்சியின் சில உறுப்பினர்களும் முயன்றிருக்கின்றார்கள்.
இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்று 19வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதும் மகிந்த ராஜபக்சவிற்கு உச்சாகம் ஊட்டும் ஒரு செய்தியை அவருக்கு நெருக்கமானவ ஒருவர் சொல்லியிருக்கின்றார்.
அதாவது, 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் இப்பொழுது அதிகாரங்கள் பிரதமருக்கு வந்திருக்கின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடக்கும் பொழுது நீங்கள் போட்டியிட்டால் நிச்சையம் பிரதமராகிவிடலாம். ஆகையால் மனதை சோர்வடைய விட்டுவிடாதீர்கள். என்று கூறியிருக்கின்றார்.
அதேபோல, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, போன்ற அரசியல் வங்குரோத்து நிலையில் இருப்பவர்களும் தமது அரசியல் பொளப்பிற்காக எப்படியேனும் மகிந்த ராஜபக்சவை அரசியல் ஆடுகளத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக படாதபாடு பட்டார்கள்.
ஆனால் முதலில் மைத்திரி தான் இந்த உளவியல் தாக்குதலை தொடங்கினார் என்று சொல்லப்படுகின்றது.
அதாவது வேட்புமனு வழங்கப்படமாட்டாது. என்று இழுத்தடித்து, மறுபடியும் வேட்பு மனு வழங்கி பின்னர், அது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன வாய் திறக்காமல் இருந்தது எல்லாம் மகிந்தவை மனரீதியாக குழப்புவதற்கென்றும், அதனால் அவர் சோர்வடைந்துவிடுவார் என்றும் கூறப்படுகின்றது.
அடுத்து ஜோதிடம், மகிந்த ராஜபக்ச இம்முறை தேர்தலில் தோற்றுப்போவர் என்று ஒரு தரப்பு ஜோதிடர்களும், அவர் தேர்தலில் வெற்றியீட்டினாலும் பிரதமராக முடியாது. சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருக்க முடியும் என்று இன்னொரு ஜோதிடத்தரப்பும் அடிக்கடி கூறிவருகின்றன.
இன்னொரு பக்கம், சமூகவலைத்தளங்களில் மகிந்தவிற்கு எதிராக இளைஞர் கூட்டம் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
அதனால் தான் நேற்று முந்தினம் மகிந்த ராஜபக்ச திடீரென முகநூலில் மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட பொறிமுறையினை பின்பற்றியிருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைய அமெரிக்கா வழங்கிய மடிக்கணனிகள் தான் காரணம் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சவினை உளவியல் ரீதியாக தாக்கும் நடவடிக்கையின் முதல் நடவடிக்கையை அமெரிக்கா தான் வகுத்துக்கொடுத்துள்ளதா என்றொரு கேள்வியும் எழுகின்றது.
எதுவாயினும், அண்மைய நாட்களாக அவர் மனநோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதை அனேகமான சம்பவங்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.
அதில் ஒன்று தான் பிரச்சாரக் கூட்டத்தின் போது தனது கட்சி ஆதரவாளரை மகிந்த ராஜபக்ச தாக்கியமையாகும்.
இதனை ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமான பகிரப்பட்டிருந்தன. இதைப் பார்த்ததும் அவர் மேலும் சோர்வடைந்துள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ மகிந்த ராஜபக்சவை மீண்டும் சிறுமைப்படுத்தி, அவமானப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இதிலிருந்து மீண்டுவருவது என்பதுதே மிகப்பெரிய சவால் தான்


0 Comments