Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனையில் தீயில் கருகி வீடு முற்றாக நாசம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகி உடைமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.
விநாயகபுரம் தாமரைக்கேணி மூன்றாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கூலி தொழில் வேலை செய்யும் பத்மராஜ் டினேஸ் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
தானும் தனது நான்கு மாத குழந்தையுடன் பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்திற்கு இரவு சென்று விட்டு பின் அதிகாலை வீடு திரும்பிய போது வீடு தீக்கிரையாகி அனைத்து உடைமைகள் தீயில் சேதமடைந்து காணப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் டி.ஜெயலக்ஷ்மி தெரிவித்தார்.குறித்த பெண்ணின் கணவர் கொழும்பில் கூலி தொழில் புரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறித்த வீட்டை நேரடியாக சென்று பார்வையிட்டு, சேதம் தொடர்பாக கேட்டறிந்தது கொண்டதுடன், சிறுதொகைப் பண உதவியையும் வழங்கி வைத்தார்.


Post a Comment

0 Comments