Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

20 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி- தீயில் கருகி வீடு முற்றாக நாசம்

கினிகத்தேனை பிட்டவளை பகுதியிலிருந்து கினிகத்தேனை நகரம் வரை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கெப் ரக வாகனமானது, ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கோவிலுக்கு அருகாமையில் ஹற்றனிலிருந்து நாவலப்பிட்டி சென்ற லொறி ஒன்றின் மீது மோதி, வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் கெப் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட மற்றுமொருவர் வாகனத்திலிருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.
வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் சாரதி கெப் ரக வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments