நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டப் பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் நோர்வூட் அயரபி தோட்டப் பகுதியிலிருந்து மஸ்கெலியா வரை சென்ற மோட்டர் சைக்கிளும் ஹற்றன்- மஸ்கெலியா பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டர் சைக்கிள்களில் பயணம் செய்த இருவருமே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
நோர்வூட் அயரபி தோட்டப் பகுதியிலிருந்து மஸ்கெலியா வரை சென்ற மோட்டர் சைக்கிள் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










0 Comments