பாகிஸ்தான் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ராஹில் செரிப் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
இலங்கை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய இராணுவத் தளபதியை இராணுவ தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வா மற்றும் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையட் சகில் ஹுசைன் மற்றும் பாதுகாப்பு தூதுவர் முஹம்மட் ராஜில் இர்ஸாட் காஹன் ஆகியோர் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
நான்கு நாட்கள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மேம்பட இவ்விஜயம் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 15ஆவது பாகிஸ்தானிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ராஹில் செரிப் கடந்த 2013 ஆண்டிலிருந்து கடமையாற்றி வருகின்றார். 1976 இல் உருவாக்கப்பட்ட 6ஆவது படையணியின் முன்னணி வீரராக மேஜர் ஜெனரல் ராஹில் செரிப் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments