கண்டி – - கொழும்பு பிரதான வீதியில் நேற்று
இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதையின் நடுவில் இருந்த பாதசாரிகள் இருவரை காப்பாற்ற டிப்பர் வண்டி சாரதிபாதையின் வலது புறத்தே வாகனத்தை திருப்பிய போது அவ்விருவரையும் மோதியவாறே எதிர்த்திசையில் வந்த லொறி
யொன்றுடன் மோதுண்டு இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது பாதசாரிகளான பொத்
துஹர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய
சம்பத் காமல் பண்டார – 25 வயதுடைய தரிந்துதசுன் தென்னக்கோன் ஆகியோரும் லொறியின் சாரதியான பன்வில பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய சந்தன பிரசன்ன ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் வண்டியின் சாரதி லொறியின் உதவியாளர் ஆகியோர் பலத்த காயங்களுடன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவின் ரன்வல எனும் இடத்தில் பாதசாரிகள் இருவர் பாதையைக் கடந்துள்ளனர். அவர்கள் இருவரும் நடு வீதியை அடைந்த போது கொழும்பு பிரதேசத்திலிருந்து கேகாலை நோக்கி டிப்பர் வண்டியொன்றே வேகமாக வந்துள்ளது.
பாதையின் நடுவில் இருந்த பாதசாரிகளை காக்கும் நோக்கில் டிப்பர் வண்டியின் சாரதி வண்டியை வலது புறமாக செலுத்தியுள்ளார். எனினும் பாதை நடுவில் இருந்த பாதசாரிகள் இருவரும் டிப்பர் வண்டியில் மோதுண்டுள்ளதுடன் டிப்பர் வண்டியானது அதனை தொடர்ந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது. இதன் காரணமாகவே விபத்து சம்பவித்து மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிப்பர் வண்டி சாரதி வைத்தியசாலையில் உள்ள நிலையில் அவரை கைது செய்துள்ள கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments