Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

237 எம்.பி.க்­க­ளுடன் 20க்கு அங்கீ­கா­ரம்

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 237 ஆக உயர்த்தும் வகையில் அமைந்­துள்ள புதிய தேர்தல் முறை யோச­னையை உள்ள­டக்­கிய 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்­திற்குஅமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.அந்­த­வ­கையில் தொகு­தி­களின் அடிப்­ப­டையில் 145 எம்.பி. க்களும் மாவட்ட விகி­தா­சாரஅடிப்­ப­டையில் 55 பேரும் தேசிய பட்­டியல்மூலம் 37 எம்.பி.க்களும் தெரிவு செய்­யப்படும் வகையில் புதிய தேர்தல் முறை யோசனைதயா­ரிக்­கப்­பட்டு அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்­ளது.விருப்பு வாக்கு முறை முற்­றாக நீக்­கப்­ப­டு­கின்ற தொகுதி மற்றும் விகி­தா­சார முறை­மைகள் அடங்­கி­ய­தாக புதிய கலப்பு தேர்தல் முறை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கூடிய விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போதே ஜனா­தி­ப­தி­யினால் திருத்­தப்­பட்ட தேர்தல் முறை மாற்ற யோசனை முன்­வைக்­கப்­பட்­ட­துடன் அதற்கு அங்­கீ­கா­ரமும் வழங்­கப்­பட்­டுள்­ளது.அந்­த­வ­கையில் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவதுதிருத்தச் சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­ கீ­காரம் கிடைத்­துள்ள நிலையில் அதனை இன்றைய தினம் வெளி­வ­ர­வுள்ள வர்த்­த­மா­னியில் வெளி­யி­டவும் ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.புதிய தேர்தல் முறை யோச­னையை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்­கான பணிகள் நேற்றுஇரவு முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.மேலும் புதிய தேர்தல் முறைசட்­ட­மூ­லத்தை வர்த்­த­மா­னியில் வெளி­யிட்டு 14 நாட்­க­ளுக்குள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இதற்கு இடைப்­பட்ட காலத்தில் உயர் நீதி­மன்­றத்தின் ஆலோ­ச­னையும் கோரப்­ப­ட­வுள்­ளது.அத்­துடன் இன, அர­சியல், பொரு­ளா­தார, சமூக பன்மை தன்மை யதார்த்­தத்தை பிர­தி­ப­லிக்கும் முக­மாக தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­குழு செயற்­ப­ட­வேண்டும்” என்றும் இந்த யோச­னையில் குறிப்­பி­டப்­பட்­டள்­ளது.குறிப்­பாக ஒரு மாவட்­டத்தில் வாழும் மக்கள் மத்­தியில் பெரும்­பான்மை இனத்­தை­விட மாற்று இன, மத ரீதி­யான சிறு­பான்மை மக்கள் வாழும் பட்­சத்தில் அவர்­க­ளது பிர­தி­நி­தித்­து­வங்­களை உறு­திப்­ப­டுத்தும் முக­மாக எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழு­வா­னது புதிய தொகு­தி­களை அமைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான அமைச்­ச­ரவை ஆவணம் உறு­தி­ப­டுத்­தி­யுள்­ளது.இதே­வேளை கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது முன்­வைக்­கப்­பட்டு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்ட தேர்தல் முறை மாற்ற யோச­னைக்கு சிறு­பான்மை மற்றும் சிறு அர­சியல் கட்­சிகள் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தன. பின்னர் அதனை மேலும் திருத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.குறிப்­பாக கடந்த திங்­கட்­கி­ழமை முன்­வைக்­கப்­பட்ட தேர்தல் திருத்த யோச­னையில் 125 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொகுதி மூலமும் 75 உறுப்­பி­னர்கள் விகி­தா­சார ரீதி­யிலும் 25 உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டியல் ஊடாக தெரிவு செய்யும் வகை­யிலும் 225 உறுப்­பி­னர்­களை கொண்­ட­தாக ஏற்­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால் இதற்கு பாரிய எதிர்ப்பு கிளம்­பி­யதால் அதனை மேலும் திருத்தி புதிய தேர்தல் முறை நேற்று முன்­வைக்­கப்­பட்­டது.குறிப்­பாக நேற்று முன்­தினம் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கொழும்பில் கூடி தேர்தல் முறை மாற்றம் குறித்து ஆராய்ந்­த­துடன் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பது குறித்தும் ஆரா­யப்­பட்­டது. இந்­நி­லையில் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது சிறு­பான்மை கட்­சி­களின் கோரிக்­கைகள் மற்றும் வலி­யு­றுத்­தல்கள் தொடர்­பா­கவும் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து தேர்தல் முறை மாற்­றத்தை உரு­வாக்­கு­வது குறித்து பேசப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராய்ந்து அர­சியல் கட்­சி­களின் யோச­னை­களை பெற்று தேர்தல் முறையை தயா­ரிக்க அமைச்­ச­ரவை உப குழு ஒன்றும் உரு­வாக்­கப்­பட்­டது.இந்த அமைச்­ச­ரவை உப குழுவில் அமைச்­சர்­க­ளான கலா­நிதி சரத் அமு­னு­கம, எஸ்.பி. திசா­நா­யக்க, லக்ஷ்மன் கிரி­யெல்ல, கபீர் ஹஷீம், சம்­பிக்க ரண­வக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கரு­ணா­தி­லக்க, பழனி திகாம்­பரம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் உறுப்­பி­னர்­க­ளாக இடம்­பெற்­றி­ருந்­தனர்.இந்த உறுப்­பி­னர்கள் பல தட­வைகள் கூடி தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து சில வாரங்­க­ளுக்கு முன்னர் தமது வரைபை முன்­வைத்­தி­ருந்­தனர்.ஆனால் அதற்கும் உட­ன­டி­யாக அங்­கீ­காரம் கிடைக்­க­வில்லை. அதன் பின்னர் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் களத்தில் இறங்கி தேர்தல் முறை மாற்ற யோச­னையை தயா­ரிக்கும் பணி­களில் ஈடு­பட்­டனர்.இந்­நி­லையில் ஆரம்­பத்தில் 255 உறுப்­பி­னர்­களை கொண்டு தேர்தல் முறை மாற்­றத்தை தயா­ரிக்­கவே யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. அதா­வது 196 உறுப்­பி­னர்­களை மாவட்ட ரீதி­யிலும் 59 உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டியல் ரீதி­யிலும் தெரிவு செய்­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.ஆனால் பாரா­ளு­மன்ற ஆச­னங்கள் 255 ஆக உயர்­வதை பல கட்­சிகள் எதிர்த்­தன. இந்­நி­லையில் வாரக்­க­ணக்கில் பேச்சு வார்த்தை நடத்­தப்­பட்டு இறு­தியில் தற்­போ­தைய யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் புதிய தேர்தல் முறை­மையின் பிர­காரம் 237 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.1978 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமே தற்­போது நடை­மு­றையில் இருக்கும் விகி­தா­சார தேர்தல் முறை கொண்­டு­வ­ரப்­பட்­டது. முன்னாள் ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்த்­த­னவின் காலத்தில் இந்த தேர்தல் முறை கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்தே தற்­போ­தைய தேர்தல் முறை­மையில் காணப்­படும் விருப்பு வாக்கு முறை­மையை பல தரப்­பினர் எதிர்த்து வந்­தனர்.இதற்கு முன்னர் புதிய தேர்தல் முறையை தயாரிக்கும் வகையில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு யோசனைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் அவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையிலேயே தற்போதைய புதிய முறை வந்துள்ளது.ஆனால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுமா என்று இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments