வெல்லாவெளிப் பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியால் துஸ்பிரயோகம் செய்த நபர்கள் வெல்லாவெளிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப்பொலிஸார் தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையிலல் நெல்லிக்காட்டுப்பிரதேசத்தினைச் சேர்ந்த 29 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கடந்த 10 ஆம்திகதி வெல்லாவெளிப் பகுதியில் தென்னங்கன்று பெறுவதற்கு சென்றபோது வீதியhல் வந்த நபர் மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் செல்வதாக கூறி அப்பெண்ணை ஏற்றிச் சென்று மறைமுகமான இடத்தில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்
புhலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண் மட்டக்களப்புவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதுடன் துஸ்பிரயோகம் செய்தவர் வெல்லாவெளிப்பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
அதேவேளை 39 ஆம் கொளனியைச் சேர்ந்த 32 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை 12 திகதி அப்பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞன் வேறு இடத்திற்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்வதற்காக அழைத்துச்சென்றபோது பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்திற்குச் சென்ற வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபுளியு.பி.ரசிக சம்பத் தலைமையிலான பொலிஸ்குழுவினர் அவரை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0 Comments