சென்னை மசாஜ் கிளப்புகளில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 6 தரகர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர், அடையாறு, ஆலந்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்ட 4 மசாஜ் கிளப்புகளில் மாறு வேடத்தில் புகுந்து பொலிசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அங்கு விபசார தொழில் நடப்பதை கண்டுபிடித்தனர். அங்கு விபசாரத்திற்காக சிறை வைக்கப்பட்ட அழகான இளம்பெண்களை பொலிசார் மீட்டு, அரசு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மசாஜ் கிளப்புகளில் விபசாரம் செய்த புகாரில் ரிச்சர்டு ( 26), பாலாஜி (37), அரவிந்த் (33), கணபதி (24), சஞ்ஜித் (26) ஆகிய தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வடபழனியில் விபசார விடுதி நடத்தி வந்த சாந்தி (40) என்ற பெண் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments