பல வருட காலமாக சட்டவிரோதமான முறையில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் இடம் ஒன்றினை ஹற்றன் விசேட பொலிஸார் இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இடம் பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் பல வருட காலமாக இயங்கி வந்ததாகவும் இதற்கு அனுமதி பெறவில்லையெனவும் தெரியவந்துள்ளது.
சுற்றி வளைப்பின் போது ஒரு மாடு வெட்டப்பட்ட நிலையிலும், இரண்டு கன்று குட்டிகள் மற்றும் ஒரு ஆட்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எனினும் இதற்கான வைத்தியரின் அனுமதியோ, சுகாதார பரிசோதகரின் அனுமதியோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் விசேட பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றது.




0 Comments