மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் மக்கள் குடியிருப்புக்களை அண்மித்த பிரதேசத்தில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன் தமிழைப் பேச்சு வழக்கு மொழியாகக் கொண்ட தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததை உறுதி செய்யும் சாசனங்கள், அவர்களின் சமய,பண்பாட்டு வழமைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சாசனங்கள் மூலமாகவும், இதற்கு முன் வெல்லாவெளிப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்கள் மூலமாகவும் வெல்லாவெளியை மையமாகக் கொண்ட சிற்றரசு ( வேள்புலம் ) ஒன்றினை அமைத்திருந்தனர் என்பது உறுதியாகின்றது.
0 Comments