பண்டாரியாவெளி கிராமத்தில் 12/06/2015, வெள்ளிக்கிழமை அன்று.கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயத்தில் மஹா கும்பாவிஷேகம் நடைபெற்று மண்டலாவிஷேகப்பூசை நடைபெற்று வருகின்றது. குறித்த தினம் அன்று இரவு மண்டலாவிஷேக பூசைக்கு வந்த பண்டாரியாவெளி கிராமத்தை சேர்ந்த அமரசிங்கம்-தம்பிராசா.(ராசன்). பூசை நடைபெற்று கொண்டிருந்த வேளை அவர் சொன்ன வசனம்.
இந்தக்கோயிலில் பாம்பு பாம்பு என்று சொல்லுகின்றார்கள் இந்த பாம்பு மக்கள் முன்னால் வந்து விளையாடலாம் தானே, இந்தப்பாம்பை நான் இதுவரைக்கும் கண்டதும் கிடையாது"" என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். எமது இந்த நாகதேவதை இரவோடு இரவாக அவரது வீட்டுக்குள் சென்று அடுத்த நாள் காலையில் அவர் எழுந்து பார்த்த போது அவர் முன் எழுந்து படமெடுத்த நடமாடி காட்சி கொடுத்து விட்டு எமது நாகசக்தி. மீண்டும் தனது உறைவிடம் வந்தமர்ந்தாள்..
0 Comments