அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 490 பேரின் விசாக்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது.
கடந்த சில மாத கால பகுதியில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களில் பாலியல் குற்றவாளிகள் 24 பேர், சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் 28 பேர், கொலைக் குற்றவாளிகள் 12 பேர் ஆகியோரும் அடங்குவார்கள்.
இந்த நபர்களில் பசுபிக, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் குடியேற்ற கொள்கையானது மிகவும் குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்ரேலியா திரும்பும் படகுகள் குறித்தான எதிர்மறை தகவல்கள் தொழிலாளர் கட்சியினை சார்ந்ததே தவிர, அது தொடர்பாக யூலை மாதம் நடக்கவிருக்கும் கருத்தரங்கு கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என குடிவரவு அமைச்சர் பீற்றர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் அவுஸ்ரேலியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என பிரதமர் டோனி அப்பாட் கூறிய கருத்தை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீற்றர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
0 Comments