Advertisement

Responsive Advertisement

கராத்தே போட்டியில் அம்பிளாந்துறை மாணவன் 02ம் இடம்

அகில இலங்கை ரீதியில் கராத்தே சம்மேளனத்தால் திரு.கே.இராமச்சந்திரன் அவர்களின் 01வது ஞாபகார்த்தமாக மாத்தளையில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கராத்தே போட்டியில் மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா
வித்தியால மாணவன் செல்வன் நடராசா ஜோதீபன் அவர்கள் கொமிட்டியில் 02ம் இடமும், காட்டாஸில் 03ம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இம் மாணவனின் சாதனையை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டி நிற்கிறது. அத்துடன் படுவான்கரை பிரதேசத்தில் இருந்து இவ்வாறான மாணவர் ஒருவரை அகில இலங்கை ரீதியில் வெற்றிபெற வைத்த பயிற்றுனர் ஜெ.சுதேஸ்கரன் அவர்களுக்கும் படுவான்கரை சமூகம் பாராட்டுதலுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.
1505509_652281158206588_5606597373582477186_n 10984501_652281101539927_1326529245481125371_n

Post a Comment

0 Comments