Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எமது பிரதேசங்களில் உண்மையில் வீடற்றவர்களுக்கு வீடுபெற்றுக்கொடுக்க் முயற்சிப்பேன்-சீ.யோகேஸ்வரன்

எமது பிரதேசங்களில் உண்மையில் வீடு இல்லாமல் இருக்கின்றவர்கள் அவர்களின் குடும்ப நிலை என்ன என்ற பட்டியலை என்னிடம் சமர்ப்பிக்கலாம். இயன்றவரை வீட்டு உதவிகளை பெற்று வழங்க முயற்சிப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி காமாட்சி நகர் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வடிகானுக்கு கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், அரச உத்தியோகத்தர்கள், கிராம பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.

நாங்கள் நீண்டகாலமாக எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இப்பொதும் மத்திய அரசாங்கத்தில் நாங்கள் எதிர்க்கட்சியினர் தான். அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் எதிர்க்கட்சியில் தான் இருக்கின்றோம். ஆனால் கிழக்கு மாகாண சபையைப் பொருத்த மட்டில் இரண்டு அமைச்சுக்களைப் பெற்றிருக்கின்றோம்.

ஒன்று கல்வி கலாசார விளையாட்டு, மீள்குடியேற்ற அமைச்சு மற்றையது விவசாய, நீர்ப்பாசன, மீன்பிடி, கூட்டுறவு, உணவு பாதுகாப்பு, கால்நடை, வணிபம் அமைச்சு இவர் எமது மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கின்றார். எமது மக்கள் அந்த அமைச்சர்களைச் சந்தித்து உங்கள் சேவைளைச், தேவைகளைக் கதைத்து பெற்றுக் கொள்ள வேண்டும். எங்களிடம் இருந்து எவற்றைப் பெறமுடியுமோ அதனை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் நாம் எதுவும் செய்யவில்லை என்று கூறக் கூடாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்றோம் பல கோரிக்கைகளின் நிமித்தம் நியாயமான தீர்வுகளை எமது மக்களுக்காகப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். நூறு நாட்களுக்கு அமைச்சுக்களைப் பெற்று எமது மக்களை ஏமாற்றுவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

ஆனால் மாகாண சபையில் அமைச்சுக்களைப் பெற்றுள்ளோம். இதனைப் பெறாது விட்டால் இந்த மாகாணத்தில் பெறவேண்டிய சலுகைகளை விகிதாசார ரீதியாக இந்த மாகாணத்தில் கூடிய நிலையில் இருக்கும் நாம் சலுகைகள் பெறாமல் அதற்கு குறைந்த விதத்தில் இருப்பவர்கள் இந்த மாகாணத்தில் சலுகைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் தான் அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றிருக்கின்றோம் அதன் மூலம் கூடுதலான பலன்களைப் பெறவேண்டும். இதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்றம் எப்போது கலையும் என்று கூற முடியாத சூழல் இருக்கின்றது. எமது பிரதேசங்களில் எத்தனை பேருக்கு வீடு இல்லாமல் இருக்கின்றது. யார் யாருக்கு உண்மையில் வீடு இல்லை. அவர்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் அவர்களின் குடும்ப நிலை என்ன என்ற விபரங்களை என்னிடம் சமர்ப்பிக்கவும். முன்னர் வீட்டுத் திட்டங்கள் பெற்றவர்கள் அல்லாமல் பெறாதவர்கள் என்னிடம் பட்டியலைச் சமர்ப்பிக்கலாம். இயன்றவரை வீட்டு உதவிகளை பெற்று வழங்க முயற்சிப்பேன்.

இந்த நூறு நாள் வேலைத்திட்டம் எமது பகுதிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதில் எமது மக்களின் முயற்சி அதிகம் இருக்க வேண்டும். இப்பகுதி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி நான் நன்கு அறிவேன் இதனால் தான் நான் கடந்த காலங்களில் சில வேலைத் திட்டங்களை இப்பகுதிகளில் ஆரம்பித்து வருகின்றோம்.

எமது மக்களின் தேவை குறித்து எப்போதும் நாம் கரிசனையாக இருப்பேன். இந்த நாட்டில் எந்த அரசாங்கங்கள் வந்தாலும் செய்யப்படுகின்ற வேலை நடந்து கொண்டே இருக்கும். முன்பு அரசாங்கத்தில் இருந்த சில அரசியல்வாதிகள் இருந்தவர்கள் பத்து இலட்சம் ரூபாவை ஏதோ அவர்கள் தான் கொண்டு வந்தது போன்று கூறி ஏமாற்றி சென்றுள்ளனர். ஆனால் பல இடங்களில் இந்நிதியில் ஒரு இலட்சம் ரூபாய், ஐம்பதாயிரம் ருபாய் என இலஞ்சம் பெற்றுள்ளனர்.

அவர்களின் நண்பர்களுக்கே இவ்வேலைகளை குத்தகைக்கு கொடுத்துள்ளனர். இது தான் மக்களுக்கு கிடைத்த பலாபலன். இதனால் மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். இத்திட்டத்தின் செயற்பாடு தரமற்றதாக மாறியது. இத்தனையையும் செய்து விட்டு அவர்கள் அத்தனை பேரின் போட்டோவையும் போட்டு விளம்பர பலகை அடித்து விடுவார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறா நிலை இல்லை நாம் பல இடங்களில் சொல்லி இருக்கின்றோம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் இலஞ்சம் கொடுக்கக் கூடாது. எந்த அரச அதிகாரிக்கும் இலட்சம் கொடுக்கக் கூடாது மக்களின் பங்களிப்போடு மொத்தம் பன்னிரண்டரை இலட்சத்திற்கும் வேலை இடம்பெற வேண்டும்.

ஆரம்பிக்கப்படுகின்ற வேலைத்திட்டம் விரவாக செய்து முடிக்கப்பட வேண்டும். இதற்காக என்னாலான சகல உதவிகளையும் மேற்கொள்வதோடு பிரதேச சபைகளின் மூலமும் நாம் பல வேலைத் திட்டங்களை நடாத்தலாம் என்று தெரிவித்தார்.







Post a Comment

0 Comments