Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நிலையுயர்வாளர் மதிப்பளிப்பு விழா

வாழைச்சேனை இந்தக்கல்லூரியில் 1998இல் சாதாரண தரம் மற்றும் 2001இல் உயர் தரம் கற்ற மாணவர்களை உள்ளடக்கிய 2001 பழைய மாணவர் வட்டமினால் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நிலையுயர்வாளர் மதிப்பளிப்பு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜா, கல்லூரின் பழைய மாணவர்களான இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குவின் பிரதிப் பணிப்பாளர் லி.கணேசமூர்த்தி,  வவுனியா மாவட்ட சிரேஸ்ட்ட சட்டத்தரணியும், சட்டதரணிகள் சங்கச் செயலளாருமான  க.தயாபரன் மற்றும் கல்குடா கல்வி வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்;, பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்வநாயகம் ஸ்ரீகிருஷ்ணராஜா அவர்களும் கௌரவ அதிதிகளாக  கல்லூரின் பழைய மாணவர்களான இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குவின் பிரதிப் பணிப்பாளர் லி.கணேசமூர்த்தி,  வவுனியா மாவட்ட சிரேஸ்ட்ட சட்டத்தரணியும், சட்டதரணிகள் சங்கச் செயலளாருமான  கதயாபரன், கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்;, வாழைச்சேனை கோறளைப்பற்றுக் கல்வி கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம்;, ஓய்வு பெற்ற ஆங்கிலப் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பா.கணேசமூர்த்தி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் கலந்து கலந்து கொண்டனர்.



இதன்போது கடந்த 2014ம் வருடம் 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த 65 மாணவர்கள், க.பொ.த உயர் தரத்தில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 9 மாணவர்கள் மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் சாதனை படைத்த 4 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.



அத்தோடு அதிதிகளாகக் கலந்து கொண்ட கல்லூரியின் பழைய மணவர்களான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், க.தயாபரன், லி.கணேசமூர்த்தி, பா.சணேசமூர்த்தி ஆகியோர் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஷ்ணராஜாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.



அதிதிகளால் சாதனை படைத்த மாணவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.





Post a Comment

0 Comments