முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு ஏற்கனவே ஷிரந்தி ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஷிரந்தி இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராவார் என அவரது ஊடக இணைப்பாளர் அனோமா வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல் பெண்மணி எப்போதும் அரசியலில் ஈடுபடவில்லை, சமூக பணிகளிலேயே ஈடுபட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி வெளிநாடுகளிலிருந்து தனது சமூக பணிகளுக்காகவே நிதியை பெற்றுள்ளார்.
எனினும் அவர் இதனை வெளிப்படையாகவே செய்துள்ளார் எனவும் அனோமா வெலிவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments