சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மூலம் வறிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திரியசவிய கடன் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்று மாவட்டங்கள் திரியசவிய கடன் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை,பொலநறுவை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் கடன் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது 300 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இந்த திரியசவிய கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் 35 பேருக்கு நிதியுதவிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.இந்த நிதியுதவியானது இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஒரு மாணவிக்கு இரண்டு வருடங்களுக்கு 24ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.

0 Comments