Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு — கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து

மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் பாலமுனை சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன்   நவீன பஜீரோ ரக வாகனம் மோதியதால்,  பஜீரோ ரக வாகன சாரதி காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


 இந்த விபத்தின்போது இரு வாகனங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன. பஜீரோ ரக வாகன சாரதி இங்கிலாந்திலிருந்து  இலங்கைக்கு திரும்பியிருந்தார். கிளிநொச்சியை சேர்ந்த இவர்,  கல்முனையில் திருமணம் செய்துள்ளார். வர்ணப்பூச்சுக்களை ஏற்றிவந்த  இந்த லொறி பாலமுனைச் சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.

Post a Comment

0 Comments