ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரமாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நாடாளுமன்றத்தை கலைத்தல், தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வருதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னரே நாடாளுமன்றை கலைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை விடுத்து வருகின்றது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறையில் மாற்றத்தைக்கொண்டு வந்த பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments