மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் செல்வ விநாயகர் ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை வாகரை ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
பாடசாலை அதிபர் திருமதி. ஜெயமலர் டிகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், பேரவை பிரதி நிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.
0 Comments