Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலை கிளிவெட்டியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி.

மூதூர்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்திலுள்ள வாய்காலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்  ஒருவர் 
 இன்று (21/05/2015) மாலை3.30 மணியளவில் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை அன்புவழிபுரத்தைச் சேர்ந்த தவராசா அஜந்தன் வயது(20) என இணங்காணப்பட்டுள்ளார்

குறித்த இளைஞன் சல்லைட் கம்பனிக்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் கூலி  வேலை செய்பவர். இன்று வேலைகளை முடித்து விட்டு நீராடிய போதே இவ் அணர்த்தம் இடம் பெற்றதாக குறித்த வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞர் தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments