Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக பொதுத் தேர்தல்?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் விரைவில் நாடாளுமன்றம் கலைத்து தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.
அண்மையில் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதும் ஜனாதிபதி எதிர்வரும் செப்டம்பரில் புதிய பாராளுமன்றம் நிறுவப்படும் என அறிவித்திருந்தார்.
இதன்படி பெரும்பாலும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளுக்கு முன்னதாக இலங்கையில் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments