Home » » தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்! ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர்!- அமைச்சர் ரவி

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்! ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர்!- அமைச்சர் ரவி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்து, திட்டமிடப்பட்டதைப் போல நாட்டிற்குச் சேவையாற்ற தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அந்த தேசிய அரசாங்கத்திலும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்றும் அவர்டிதெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச என்பவர் இந்நாட்டு மக்களின் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரே ஜனாதிபதியாகும். அவரைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. அவர் மக்கள் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர். அவர் எமக்கு சவாலுக்குரியவர் அல்ல.
முன்னாள் ஜனாதிபதிகள் பாராளுமன்றத்திற்கு வந்து பின் ஆசன உறுப்பினர்களாக இருந்த வரலாறு எங்குமில்லை.
அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் என்ற வகையில் நிச்சயமாக தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பார். அந்த அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார்.
ராஜபக்ச அரசு இந்நாட்டுப் பொருளாதாரத்தை சுரண்டி எடுத்திருக்கின்றது. மக்களின் பைகளுக்குச் செல்ல வேண்டிய பணத்தை தமது பைகளுக்குள் போட்டுக் கொண்டவர்கள் அவர்கள். இன்னும் வெட்கமில்லாமல் அதிகாரப் பசியுடன் செயற்படுவதைக் காண முடிகின்றது.
வெள்ளை வேன் கலாசாரத்தினால் நாட்டில் எத்தனை பேரை இல்லாமல் செய்திருக்கின்றார்கள்? நாடு முழுவதிலும் புதையல் தோண்டினார்கள்.
பாதுகாப்புப் படையின் தலைமைச் செயலகத்தினை நிர்மாணிப்பதற்காக 20 பில்லியன் ரூபாய். ஒரு புறத்தில் 2000 கோடி என்று சொல்லுகின்றார்கள். மறு புறத்தில் 5000 கோடி என்று கூறி நூற்றுக்கு இரண்டரை வீதம் கட்டிடக் கலை வல்லுனருக்கு கட்டணம் செலுத்துகின்றார்கள்.
லங்கா ஹொஸ்பிட்டல், மிக் கொடுக்கல் வாங்கல்கள் என வைத்துக் கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குச் செல்ல முடியாது என்று கூறுகின்றார்கள்.
தம்மிடம் தவறில்லாவிட்டால் எம்மைப் போல விசாரணைகளுக்கு பயமின்றி ஏன் செல்ல முடியாது?
கடந்த பத்து வருடத்தில் இவர்கள் செய்த தவறுகள் அனைத்தையும் எம்மால் இந்த 100 நாளினுள் சரி செய்ய முடியாமல் போனது உண்மையே. என்றாலும் நாம் அதிகமானவற்றை, பல நல்ல விடயங்களை நாட்டுக்காகச் செய் திருக்கின்றோம்.
19வது திருத்தச் சட்டத்தின் மூலம் சுத்தமான, ஊழலற்ற ஆட்சிக்கான வழியை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அனைவரினதும் வருமானத்தை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றோம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |