மட்டக்களப்பு இந்துக் கல்லூரியும், பெரியகல்லாறு மத்தியகல்லூரியும் மோதும் இவ்வருடத்திற்கான 5வது இமயத்திற்கான கிரிக்கற் சமர் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் 30ந் திகதி சனிக்கிழமை இன்று காலை 9.45 மணியளவில் அதிபர் க.நல்லதம்பி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, பெரியகல்லாஷறு மத்தியகல்லூரி அணியினர் துடுப்பாட்டத்தையம், மட்டக்களப்ப இந்துக்கல்லூரியினர் களத்தடுப்பையும் மேற்கொணண்டு வருகின்றனர்..
ஆரம்ப நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பாராறுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.. அதி விசேட அதிதிகளாகபட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், கலந்து கொண்டார். அதிதிகள் வாண்ட வாத்தியம் சகிதம் வரவேற்கப்பட்டு, தேசிய பாடசாலை கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, மங்கலவிளக்கேற்றி, போட்டி அறிவிப்பு பிரதம விருந்தினரால் .சம்பிரதாயபூர்வமாக வாசிக்கப்பட்டு, அணி வீரர்களின் சுய அறிமுகத்துடன் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இப்போட்டியின் யு.எல்.நபுடீன். புவிதரன், வனடிற் ஆகியோர் நடுவர்களாக செயற்படுகிள்றனர்.
0 Comments