Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புங்குடுதீவு மாணவி கொலை! வெளியாகிய புதிய தகவல்கள்

புங்குடுதீவில் மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புங்குடுதீவு வேலனை பிரதேச சபையில் தண்ணீர் பவுஸர் ஓட்டுநராக இருந்த தாக கூறப்படும் குறித்த நபர் , புங்குடுதீவு பொலிஸ் நிலைய தண்ணீர் தாங்கிக்கு நீர் நிரப்பும் பொருட்டு அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகளுடனுன் நல்ல தொடர்பைப் பேணி வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாயார் , சில காலங்களுக்கு முன்னர் 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளமையே கொலைக்கான பிரதான காரணியாக அமைந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர்களால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொலையின் பிரதான சந்தேகநபரும், அவரின் சகாக்களும் குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குற்றத்தை புரிவதற்காக 50,000 ரூபா தருவதாக இணக்கம் காணப்பட்டிருந்த தாகவும், இதன்படி முதலில் 10,000 ரூபா வழங்கப்பட்டிருந்த தாகவும் , குற்றத்தின் பின்னர் மிகுதிப் பணத்தை தருவதற்கு ஒப்பந்த த்தை வழங்கியிருந்தவர் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

jaffna Veteja

Post a Comment

0 Comments