கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள கட்டடமொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் ஐவர் பலியாகியுள்ளனர்.
எல்பிஸ்டன் அரங்கிற்கு அருகிலுள்ள கட்டடத்திலே இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்தில் சிக்கிய மூவரில், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டிடத்தில் உள்ள ஹோட்டலில் முதலில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய கடைகளுக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீ பரவியதற்கான காரணம் கண்டறியப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரண்டாம் இணைப்பு
மருதானை எல்பிஸ்டன் திரையரங்குக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டலில் காஸ் சிலிண்டர் வெடித்ததினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீயையடுத்து கிளம்பிய புகையை உள்ளிழுக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஹோட்டல் 5 மாடிகளை கொண்டது என்றும் ஐந்து மாடிகளுக்கும் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.







0 Comments