வலிகாமம் தென்.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட மானிப்பாய் பகுதியில் இளம்பெண்ணொருவரின் சடலம் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் மானிப்பாய் கிழக்கு மானிப்பாயை சேர்ந்த சோமசுந்தரம் அனித்தா (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தொடர்ச்சியாக சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காணமற்போயிருந்தார். கடும் மழை காரணமாக தேடுதல் மேற்கொள்ளமுடியாத நிலையில் உறவினர்கள் நேற்றுக் காலையே இவரை தேடியுள்ளனர்.
கிணற்றிலிருந்து நேற்றுக் காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோ தனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது


0 Comments