Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நல்லாட்சியை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நல்லாட்சிக்கும் அச்சுறுத்தல்- சந்திரிக்கா

நல்லாட்சியை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நல்லாட்சிக்கும் அச்சுறுத்தல் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது பல கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது.
அனைத்து செயற்பாடுகளும் நல்லாட்சிக்காகவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டவர்கள் தவறான வழியில் அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக, அவர்கள் நல்லாட்சிக்கு எதிராக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக போராடியவர்களில் ஒருவர் அதேபோல் போரின் வெற்றிக்காகவும் போராடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments