குடிப்பழக்கத்தையும் கைவிட்டார்.
இவ்வாறு திருந்தியதுடன் மட்டும் நில்லாது ஆலய வழிபாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பதிலும் ஈடுபட்டராயினும் மனைவி மக்கள் அவரை ஏற்கவில்லை. இந்த மன விரக்தியின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளார்."
இவ்வாறு மட்டக்களப்பு வாவியில் கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்ட ஜி.விசித்திரக்குமார் (வயது 40) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் சகோதரியான திருமதி
குணவதி தர்மராசா கூறினார்.
மனைவியான சசிகலா கூறியதாவது,
"கணவர் கல்லடி புது முகத்துவாரத்தைச் சேர்ந்தவர் நான் கிரான் கிராமத்தைச் சேர்ந்தவர். நாங்கள் இருவரும் காதலித்து 2001ஆம் ஆண்டிர் திருமணம் செய்து கொண்டோம். எமக்கு 13,11 வயதுகளில் இரு பெண் பிள்ளைகளும் 6 வயதில் மகனும் உள்ளனர். 2010ஆம் ஆண்டு வேலைக்காக சவூதிக்குச் சென்றவர் 2012ஆம் ஆண்டு வரை காசு அனுப்பினார். பின்னர் பணமும் அனுப்பவில்லை. எம்முடன் எதுவித தொடர்பும் கொள்ளவில்லை.
கடந்த வருடம் நவம்பர் மாதம் வீட்டிற்கு வந்தார். அவர் காணப்பட்ட கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. நீண்ட தலை முடியும் தாடியும் வளர்த்திருந்ததுடன் மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்தார்.
இதனால் நான் அவரை ஏற்கவில்லை. பின்னர் அவரின் அக்காவுடன் வசித்து வந்தார். இடையிடையே கிரானுக்கு வருவார்.ஆனால் நான் சந்திப்பதில்லை. பாடசாலையில் பிள்ளைகளையும் சந்திக்க விட வேண்டாம் என சொல்லி வைத்தேன். ஐந்து நாட்களுக்கு முன் வீட்டிற்கு சென்றார். அந்த நேரம் நான் வீட்டில் இருக்கவில்லை.
பின் எனது சித்தியின் வீட்டுக்குச் சென்று நான் திருந்தி விட்டதாகவும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். 10 நாட்களில் சேர்த்து வைப்பதாக சித்தி கூறி உணவும் கொடுத்துள்ளார். பின்னர் அவர் சென்று விட்டார்.
இவற்றையெல்லாம் என் சித்தி மூலம் நான் அறிந்தேன்.
அதன் பின்னர் கல்லடிப் பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என அறிந்தேன்."
இவ்வாறு அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.
பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்தியர் எம்.ஏ.தாஹிர், நீரில்
மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தார்.
குடும்பத்தகராறு காரணமாக மனம் வருந்தி செய்த தற்கொலை மரணம் என்று மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் தீர்ப்பு வழங்கியதுடன் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக் குமாறு கட்டளையிட்டார்.
0 Comments