யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவினை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொடூரமாக படுகொலை புரிந்த காமூர்களுக்கு விரைவாக நீதி வழங்க கோரி பாரிய கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை அம்பாறை,
திருக்கோவில் பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆதரவு தெரிவித்து தனியார் வர்த்த நிலையங்கள், வங்கிகள் பிரதேச மகளிர் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பங்கு கொண்டிருந்ததடன் குறிப்பாக திருக்கோவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர் பேரம்பலம். விஜயராசா(வீரா) கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்திருந்தார்.
இவ் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், விநாயகபும் சக்தி வித்தியாலய உயர்தர மாணவ, மாணவிகள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் திருக்கோவில் பிரதேச மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருக்கோவில்; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு எதிர்ப்பினை தெரிவித்திருந்ததுடன் தனியார் வங்கி ஒன்று தனது சேவையினை மட்டுப்படத்தபட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments