Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஹற்றன் காசல்ரீ ஒஸ்போன் தோட்டத்தில் குளவி கொட்டியதால் 10 பேர் வைத்தியசாலையில்.

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ ஒஸ்போன் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிந்தவேளையில் தேயிலை செடிகளுக்குள் இருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தொழிலாளிகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாதிக்கப்பட்ட 10 பேரில் 6 பேர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 4 பேரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவத்தில் ஒரு ஆணும், மூன்று பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments