சுவிஸ் உதயம் அமைப்பின் 11வது ஆண்டு நிறைவு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் தேவசகாயம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பல்வேறு விடயங்கள் மேடையேறற்றப்பட்டதுடன், சுவிஸ் உதயம் அமைப்பின் கடந்த பதினொரு வருட காலச் செயற்பாடுகள் பற்றிய விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் எதிர்வரும் காலங்களில் இவ் அமைப்பின் மூலம் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களுக்கென மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறான விடயங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன.
இவ்வைபவத்தின் பல்வேறான கலை கலாசார தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும்; இடம்பெற்றன.

0 Comments