முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்காக என் மீதே சேறு பூசப்படுகின்றது என மஹிந்தவின் முன்னாள் பிரதம ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தமையினால், முன்னாள் அமைச்சர்கள் சிலர் என் மீது சேற்றை அள்ளி வீசி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு நானே காரணம் என சில முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தமக்கு எவ்வித கெடுதலையும் செய்யவில்லை.
எங்கோ செல்பவர்களே என்னை துன்புறுத்தி சேறு பூசி வருகின்றனர் என சுமணதாச சிங்களப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை. ஜோதிடர் சுமணதாசவின் ஆலோசனையின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவிக் காலம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments