புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை பாடசாலைகளின் முன் ஆரம்பிக்கப்பட்டு கல்முனை தமிழ்பிரிவு பிரதேசசெயலகத்திற்கு முன்னால் நிறைவடைந்தது.
இன்று கல்முனை பகுதிகள் எங்கும் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் அனைத்து வியாபார தலங்களும் மூடிக்காணப்பட்டது புங்குடு தீவு மாணவியின் படுகொலையினை கண்டித்து வடகிழக்கில் உள்ள பாடசாலகளின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தவண்ணமே உள்ளது.
அதனொரு கட்டமாக இன்று காலை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயரடதர பாடசாலை, சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பாiசாலைகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமுன்பாக அமைதிவழியிலான போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்.
மாணவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கும் போது வித்தியாவின் படுகொலையினை மாணவர் சமூதாயம் முற்றாக எதிர்ப்பதாகவும் நேற்று சரண்ணியா, இன்று வித்தியா நாளை யார் என்ற வினாக்களையும் கேட்டிருந்தார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாரான கீழ்தரமான படுகொலையினை செய்தவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை இந்த அரசாங்கம் கொடுக்கவேண்டும் அத்தோடு இனிமேலும் இவ்வாரான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதோடு ஜனாதிபதிக்கான மகஜரை கல்முனை தமிழ்பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் கையளித்தமையும் குறிப்படத்தக்கது.
0 Comments