புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கக் கோரி கிழக்குப் பல்கலைக் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டகாரர்கள் “மாணவர் சக்தி மாபெரும் சக்தி”, “தண்டனை கொடு இல்லையேன் எம்மிடம் கொடு”, “தண்டனை கொடு உடனடியாகக் கொடு”, “சட்டத்தரணிகளே அநீதிக்கு எதிராக குரல்கொடுங்கள்”, உலகமே வித்தியாவிற்கு குரல்கொடு”, “ பெண்களுக்கான சட்டம் எங்கே? அவர்களுக்கான நிலைநாட்டப்படும் நீதி இதுதானா?” , “ இன்று வித்தியா நாளை?” “அரசே மாணவி வித்தியா விடயத்தில் உடன் நீதியை நிலைநாட்டு” “சட்டத்தரணிகளே காம வெறியர்களுக்கு துணைபோகாதீர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை எந்தி மாணவி வித்தியா வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் சார்பில் எந்த சட்டத்தரணிகளும் ஆஜராக்க கூடாது, குற்றவாளிகளை தூக்கிலிட்டு சட்டத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்து” பெண்களுக்கெதிராக பாலியல் ரீதியிலான வன்முறைகளை தடுப்பதற்கு ஒன்றிணைவோம், கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்”
0 Comments