கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வித்தியாவின் சடலம்..
கொழும்பு வாழ் சட்டத்தரனி வீ.ரி தமிழ்மாறன் அவர்கள், புங்குடுதீவில் வித்தியாவை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்த சமூகவிரோதிகளுக்கு பணமும் மதுபானமும் வாங்கிக்கொடுத்து வன்புணர்வை ஊக்குவித்த சுவிஸ்பிரஜையை சட்டத்தில் இருந்து காப்பாற்றி சுவிஸிற்கு அனுப்பி வைப்பதற்கு கடும் முயற்சி எடுத்துவருகிறார்.
சுவிஸ் பிரஜையின் தொடர்புகளினூடாக லட்சக்கணக்கில் பணம் கைமாறப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவருக்கு பொலிஸ் மற்றும் கடற்படை தீவிர பாதுகாப்பை வழங்கி வருகிறது.
வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்தது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் அவளைக் கற்பழித்த கொடூரக் காமுக சகோதரர்கள். வித்தியாவைக் கற்பழிப்பதற்காக அவளது நடவடிக்கைகளை அவதானித்து அவளை திட்டமிட்டுக் கடத்தியுள்ளார்கள் இவர்கள். ஒரு சகோதரன் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளான. குறித்த 3 சகோதரர்களை விட இன்னும் சிலர் இந்த கற்பழிப்புக் கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் வலுக்கின்றது.
வித்தியாவின் கால்கள் தனித்தனியான இரு மரங்களில் அகலமாகக் கட்டப்பட்டுள்ளது. அவள் கத்திய போது அவளது உட்காற்சட்டை அவளது வாய்க்குள் திணித்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அவளது கழுத்துப்பட்டியால் அவளது இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டியுள்ளார்கள். இடுப்புக்குக் கீழே இருந்த ரைட்டர் ( உள்ளாடை) ஆடைகளை இல்லாது செய்துவிட்டு அவளது சீருடையை கழுத்துப் பகுதி வரையும் உயர்த்தி வைத்துவிட்டு அவளை உயிருடனேயே வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் அவளை தாங்கள் கற்பழிப்பதை மாறி மாறி வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவி ஜனாதிபதியின் பரிசு பெறுமளவுக்கு கல்வியிலும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வந்ததாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியின் சகோதரி யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் தெரியவருகின்றது. தங்கையைக் காணவில்லை எனத் தேடித் திரிந்த சகோதரன் பாழடைந்த வீட்டின் பின்புறம் தங்கை அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு மயங்கி வீழ்ந்துள்ளான்.
தங்கச்சியை காணவில்லையென்பது முதல்நாள் மாலைதான் தெரிந்தது. எல்லா இடமும் தேடினோம். கிடைக்கவில்லை. பொலிசாரிடம் முறையிட்டோம். அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். மறுநாள் காலையில் தேடிக்கொண்டு சென்றபோது, அந்த வீட்டு வளவுக்குள் ஒரு சப்பாத்தைக் கண்டேன். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. உடனே உள்நுழைந்தேன். அங்கு தங்கச்சி அலங்கோலமான நிலையில் சடலமாகக் கண்டேன். கால்கள் கட்டப்பட்டு, கைகள் தலையின் பின்னால் பாடசாலை கழுத்துப்பட்டியினால் இறுகக் கட்டப்பட்டிருந்தன. ஆடைகள் கிழித்து அகற்றப்பட்டிருந்தன. இதை பார்த்ததும் அந்த இடத்திலேயே நான் மயக்கமுற்று வீழ்ந்துவிட்டேன். அதன்பின்னர் எனக்கு என்ன நடந்ததென்று தெரியாது. தொடர்ந்து நான் யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில்தான் கண்விழித்துப் பார்த்தேன்.
இது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரன் கூறியவை. இப்பொழுது அனைவரது வாய்களும் புங்குடுதீவை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால், அங்கு என்ன நடந்ததென்பதை அறிக்கையிட எமது செய்திளார் சென்றபோது, சகோதரன் கூறிய வார்தைகள் அவை.
இன்றைய திகதியில் ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் எல்லாம் அது பற்றியே கொந்தளிக்கின்றன. கனவுகளுடன் வளர்ந்த இந்த இளம்மொட்டை சீரழித்து கொன்றதை எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாதென்பதும், தனை செய்தது நம்மவர்கள் தானென்பதுமே கொந்தளிப்பின் பிரதான காரணங்கள்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சி.வித்தியா (வயது 18) என்ற உயர்தர வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை கொடூரமாக காமகர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அங்கு என்ன நடந்தது, தற்போதைய நிலவரங்கள் என்ன என்பதை அறிக்கையிட எமது செய்தியாளர் சென்றிருந்தார்.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்பவர் சி.வித்தியா (வயது 18). கடந்த புதன்கிழமை காலை 7.30 மணியளவில் வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாலையாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் பாடசாலைக்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், மாணவி அன்று பாடசாலைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கியுள்ளனர். இரவு 10 மணிவரை தேடியும் மாணவி தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மேலும் பதற்றமடைந்த பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிசாரிடம் ஓடிச் சென்ற அந்த குடும்பத்திற்கு முதலாவது அதிர்ச்சி காவல்நிலையத்தில் காத்திருந்தது. அங்கு கடமையிலிரந்த ஒரு அதிகாரி, உங்கட மகள் யாரையாது லவ் பண்ணி ஓடிப்போயிரப்பாள் என பொறுப்பற்ற விதத்தில் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள், மாணவியின் தாயாரின் மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தியது என்பது, மாணவியின் மரணச்சடங்கில் வெளிப்பட்டது. அவர் அந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி அரற்றியபடியிருந்தார்.
பொலிசாரின் பொறுப்பற்ற பதிலுடன், அந்த குடும்பத்திற்கு அன்றிரவு தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது. அடுத்த நாள் வியாழக்கிழமை காலையும் ஊர்மக்களும் உறவினர்களும் சேர்ந்து தேடத் தொடங்கினர். மாணவி வழமைபோல் பாடசாலைக்கு செல்லும் ஆலடி வீதியூடாக அவர் செல்லவில்லை என்பது பின்னர் தெரியவர, அதனையடுத்து வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் பாதைகள் அனைத்திலும் ஊர்மக்கள் தேடுதல் நடத்தினர்.
பிரதான வீதியிலுள்ள ஆலடிச் சந்தியிலிருந்து செல்லும் சிறுவீதியொன்றின் (கண்ணகி அம்மன் கோயில் பகுதி) சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறமாக உள்ள பற்றைக்குள் இருந்து மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உறவினர்கள், ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சென்று பார்த்தபோது மாணவியின் இரு கைகளும் தலைக்கு மேலாகச் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலும் கால்கள் அலரி மரச் செடியில் இழுத்து கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்பது புரிந்தது. இதுவே, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கொதிப்பான நிலையை ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளிக்க தொடங்கினார்கள். உடனடியாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் நடத்தினர். மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அவரது புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் சிதறுண்டு காணப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த நீதிவான் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவியின் சடலத்தை அண்மித்திருந்த பகுதியில் பொருட்களும் அணிந்து சென்றிருந்த ஆடைகளும் பொலிஸாரால் சான்றுப் பொருட்களாக எடுத்துச் செல்லப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மாணவியின் மரணம் தொடர்பாக தெரிவிக்கையில்- மாணவி மிக மோசமாக, ஒன்றுக்கு மேற்பட்டோரின் கூட்டு வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலும் தலையில் அடிபட்டதனால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவுமே அவரது இறப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலதிக பரிசோதனைகளுக்காக மாணவியின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவியின் வீட்டிற்கு சென்ற எமது செய்தியாளரிடம்மாணவியின் தாயார் பேசும்போது- மகளின் வாயிலிருந்து இரத்தம் வெளியேறியிருந்ததாக பார்த்தவர்கள் கூறினார்கள். எனது பிள்ளை யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாள். எவருடனும் கதைப்பதுமில்லை. மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவள். வீட்டிலிருந்து புறப்பட்டு நேராகப் பாடசாலைக்கு சென்று விடுவார். அதேபோன்று பாடசாலை விட்டு நேராக வீட்டுக்கு வந்து விடுவார் என கண்ணீர் மல்க கூறினார்.
இந்த சம்பவத்தின் பாரதூரதன்மையும், உணர்வுபூர்வதன்மையும் கருத்தில் கொண்டு விசேட அணிகள் களமிறக்கப்பட்டதாக, வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அலுவலக அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கூறினார். பொலிசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த சமயத்தில் பொலிசார் ஒரு உத்தியை கையாண்டனர். தாம் குறிவைக்கப்பட்ட விடயத்தை குற்றவாளிகள் உணரமுன்னர் அவர்களை மடக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரு சோடிக்கப்பட்ட கதையை அவிழ்த்து விட்டு, குற்றவாளிகளை திசைதிருப்ப முயன்றனர். தம்முடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர் சிலரை தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர், ஆனால் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற தகவலை கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்களும், நம்ப, உடனடியாக புலம்பெயர்ந்துள்ள ஊடகங்கள் பலவற்றில் இந்த செய்தி மின்ன ஆரம்பித்தது.
இந்த திசைதிருப்பல் பொலிசாருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. ஒரு காமுகனை தெருவில் வைத்து மடக்கி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உரித்தெடுத்ததில், உள்ளதனைத்தையும் கக்கிவிட்டான். தமது கூட்டாளியை பொலிசார் மடக்கியதை எப்படியோ மோப்பம் பிடித்த மற்ற இரண்டு காமுகர்களும் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், இதற்குள் அவர்களை பொலிஸ் உளவாளிகள் கண்காணிப்புவலையமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டனர். அவர்கள எந்த பேரூந்தில் எத்தனை மணிக்கு ஏறினார்கள் என்ற விபரங்கள் விலாவாரியாக கிடைக்க. புங்குடுதீவில் பேரூந்தை வழிமறித்த பொலிசார் அவர்களை மடக்கினார்கள்.
அவர்களையும் உரித்தெடுத்ததில் உள்ளதை ஒப்பக் கொண்டு விட்டனர். ஆனால் ஒருவிடயம் மட்டமே நெருடலாக உள்ளது. குடும்ப முன்பகையை தீர்க்கவே இதனை செய்ததாக காமுகர்கள் கூறியதாக பொலிசார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர். எனினும், இதனை மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்புமே கிடையாதென்றும், எப்படி முன்பகை வரலாமென்றும் கேட்கிறார்கள்.
அதிகளவான தண்டனையிலிருந்து தப்பிக்க காமுகர்கள் விடும் கதையா இதுவென்பதை நன்றாக ஆராய வேண்டும்.
அதிகளவான தண்டனையிலிருந்து தப்பிக்க காமுகர்கள் விடும் கதையா இதுவென்பதை நன்றாக ஆராய வேண்டும்.
அதேபோல, இரண்டு குடும்பங்களும் உறவுமுறையானவை என்ற பொலிசாரின் கூற்றையும் மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இதுவும் ஆராயப்பட வேண்டியது.
மாணவியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் வியாழக்கிழமை இரவு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சடலம் புங்குடுதீவிற்கு கொண்டு வரப்பட்டு அவரின் பாடசாலையின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் தமது அஞ்சலிகளை செலுத்தினர். அதன் பின்னர் மாணவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
0 Comments