Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகிமை கூறும் கானமிர்தம் இறுவெட்டு வெளியீடு

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வர், ஆலய பெருமை கூறும் பாடல்கள் பத்து அடங்கிய கானமிர்தம் இறுவெட்டு வெளியீடு இன்று(12) பிரதேச கலாசார மண்டபத்தில் ஆலய வண்ணக்கர் தலைவருமாகிய ப+.சுரேந்திரராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதற்கான கவி வரிகளை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தேசபத்து அருணாசலம் சிவனேசராசா, கவிக்கோ வெல்லவூர்கோபால், கலாபூசணம் சிவஸ்ரீ க.லோகநாதக்குருக்கள், சோலையூரான் ஆறுமுகம் தனுஸ்கரன் எழுதியிருப்பதுடன் இப்பாடல்களை ரி.எல்இமகராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிருஸ்ணராஜ், ஸ்ரீஷா  சந்தோஸ், மகதி, மகாநதி ஷோபனா, உன்னிகிருஸ்ணன் ஆகியோர் பாடியுள்ளனர். இசையை ரி.எல்.மகராஜன் வழங்கியுள்ளார்.

இவ் இறுவெட்டுக்கான அனுசரணையினை முழுமையாக வழங்கி இதனை அமரர்.ஆ.சிவஞானம் குடும்பத்தினர், முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை வெளியீட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி.க.தங்கேஸ்வரி, பிரதேசசெயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், சட்டத்தரணிகள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆலயங்களின் தலைவர் செயலாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பாடலடிகள் எழுதிய கவிஞர்களும் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.




















Post a Comment

0 Comments