Advertisement

Responsive Advertisement

தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜோன் கெரியை சந்திப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா இன்னமும் பதில் எதனையும் வழங்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் சந்திப்பு நடாத்தும் நோக்கில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தக் குற்றச் செயல் உள்ள விசாரணைகள் மீது திருப்தி இல்லை எனக் கூறவும், இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு கோரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜோன் கெரியை சந்திக்க முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மட்டுமே ஜோன் கெரி சந்திப்பு நடத்த உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments