Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகிலேயே மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியல்

உலகிலேயே மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 8 ஆவது இடம்பிடித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தீவிரவாதம், கிளர்ச்சி உள்ளிட்டவை அதிகம் நடக்கும் அபாயகரமான 10 நாடுகள் குறித்த ஆய்வை வொஷிங்டனைச் சேர்ந்த புலனாய்வு அமைப்பு ஒன்று நடத்தியது.
அபாயகரமான நாடுகளின் பட்டியலில் ஈராக், சிரியா, நைஜீரியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளதாகவும், பாகிஸ்தான் 8வது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத செயல்கள், உள்நாட்டுப் போர், கலவரம், உயிரிழப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோமாலியா, லிபியா, ஏமன், உக்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments