Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

19ம் திருத்தம் பௌத்தத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதவேண்டும்!- தினேஸ் - 19ன் விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன

19ம் திருத்தச் சட்டம் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதப்பட வேண்டுமென மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை அழிக்கும் ஓர் சூழ்ச்சித் திட்டமாகவே 19ம் திருத்தச் சட்டத்தை கருத வேண்டியுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் 33ம் சரத்தில் சமயம் தொடர்பிலான பகுதியில் இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டால் பௌத்த மதத்தை பாதுகாக்க முடியாது. இந்த நிலைமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியலமைப்பு மாற்றம் என்பது என்ன என்பதனை நாடு அறிந்திருக்கவில்லை. மக்களுக்கு தெரியாமல் அரசியலமைப்பை மாற்றும் நாடு உலகில் வேறு எங்கும் கிடையாது.
அரசியல் அமைப்பின் 9ம் சரத்தின் அடிப்படையில் பௌத்த மதத்தை பாதுகாக்க அரசாங்கம் கடப்பாடுடையது.
அந்த விடயங்களில் எவரும் கை வைக்கக் கூடாது, அவ்வாறு மாற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தினேஸ் குணவர்தன சிங்கள பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
19ன் சட்டவியாக்கியான விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன
19 வது அரசியலமைப்பின் சட்டவியாக்கியானம்; குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.
இதன்போது விசேடமாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 16 மனுக்களும் 5 இடையீட்டு மனுக்களும் ஆராயப்படுகின்றன.
பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவன், நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, பிரியசாத் ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இன்று மேலதிக விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்றம் சட்டவியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இரகசிய தீர்ப்பாக அறிவிக்கப்படும்.
இதனையடுத்து சபாநாயக்கர் அதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவார்.
இந்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதன்போது பெரும்பாலான மனுக்களில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அடிப்படை உரிமைகள் என்பன தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் 19வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவற்கு நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அரசாங்கம் இந்த யோசனையில் தமது திருத்தங்களை உள்ளடக்கி கடந்த மாதம் 13ம் திகதியன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments