Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முறக்கொட்டாஞ்சேனை சேர்மன் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் குடும்பத்தினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று செவ்வாய்கிழமை இடம் பெற்றுள்ளது.

வீடு தீப்பிடித்து எரிகின்றது என்று எண்ணிய அயலவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உட்சென்று பார்த்த போது மரணமடைந்த பெண் தீக் காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும், இறந்தவர் சாமித்தம்பி கமலேஸ்வரி (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயெனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் கணவரான யோகராசா ஜெயசுதன் என்பவர் தெரிவிக்கையில்...

நான் தொழில் நிமிர்த்தம் சவுதியில் நான்கு வருடங்கள் கடமையாற்றி விட்டு கடந்த வருடம் 2014.08.10 நாடு திரும்பிய நிலையில் எனது விடுமுறைக் காலம் முடிவடைந்த நிலையில் 2015.04.28 பயணம் மேற்கொள்வதற்காக எனது பிறப்பிடமாக கல்முனையிலுள்ள தாயாரின் வீட்டிலிருந்து பிரயாணத்தை மேற்கொள்வதற்காக முறக்கொட்டாஞ்சேனையில் இருந்து கல்முனைக்குச் சென்றிருந்தேன்.

கல்முனையிலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இச்செய்தி கேள்வியுற்றேன் என்றும், என்னை மிகவும் சந்தோசமாகத்தான் வழியனுப்பி வைத்தார் என்றும், அவரது இச்செயலுக்கு என்ன காரணம் என்று தனக்கு எதுவும் தெரியாதென்றும் தெரிவித்தார்.

இச்சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஷீர் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படடைக்குமாறு ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த பெண்ணுக்கு ஏழு வயதில், நான்கு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Post a Comment

0 Comments