மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பணி புரிகின்ற அதிபர்களோ அசிரியர்களோ சரி மிக விரைவாக பதிவியுயர்வு பெற்று விடுவது வழமை. இதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இவ்விதம் இருக்க இலங்கை அதிபர்கள் சேவை(SLPS 2 - I) தரம் 2 - 1 பதவி நிலையில் பிரதியதிபராகக் கடமையாற்றி க.தம்பிராசா அவர்கள் (SLPS - 1) தரம் 1 க்கு பதவியுயர்வு பெற்றுள்ளார். இவரின் சேவைக்கானமானது ஆரம்ப கட்டமாக ஆசிரியாக மட்/ வாகரை ம.ம.வி 03.05.1993 தொடக்கம் 31.08.1998 வரை. இதற்கு அடுத்ததாக அதிபராக மட்/சாந்திபுரம் விபுலானந்த வித்தியாலயம், களுதாவளை இதில் 01.09.1998 தொடக்கம் 14.04.2002 வரையும் கடமையாற்றினார். அடுத்ததாக பிரதியதிபராக மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி 15.04.2002 தொடக்கும் இன்று வரையும் கடமையாற்றி SLPS தரம் 1 க்கு பதவியுயர்வு பெற்றுள்ளார். இப்பதவியுயர்வானது பிரதியதிபர் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவைக்கு கிடைத்த பரிசாகக் கருதப்படுகின்றது. இவர் வித்தியாலய அதிபர் பொன்.வன்னியசிங்கம் அவர்களோடு இணைந்து தோளோடு தோள்நின்று தனது கடமையை கண்ணியமாக செய்த பிரதியதிபராகக் காணப்படுகின்றார்.
அதிபர் பொன் வன்னியசிங்கம் அவர்கள் குறுகிய கால விடுமுறையில் இந்தியா சென்ற வேளை அதிபராக ஒரு வருடம் சிறப்பாகக் கடமையாற்றியமை குறிப்பித்தக்கது. வித்தியாலய அதிபர் (SLEAS)இலங்கை நிர்வாக சேவைக்கு பதவியுர்வு பெற்று அலுவலகத்துக்கு செல்ல இருக்கின்ற அதேவேளை இவருக்கு கிடைத்திருக்கின்ற பதவியுயர்வு பயன்மிக்கதொன்றாக பாடசாலையில் அக்கறை கொண்ட சமூகத்தால் கருதப்படுகின்றது. க.தம்பிராசா பிரதியதிபர் பதவியுயர்வு பெற்றமையை கௌரவிக்கும் முகமாக பாடசாலை ஒன்றுகூடலில் மாலைகள் அணிவிக்கப்பட்டு அவரின் சேவைகள் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் வித்தியாலய ஒன்றுகூடலில் தம்பிராசா பிரதியதிபரால் தேநீர் விருந்துவசாரம் ஒழுங்கு செய்யப்பட்டுடிருந்து. இந்நிகழ்வின் போது வித்தியாலய அதிபர் பொன்.வன்னியசிங்கம் அவர்களால் பிரதியதிபருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர். பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் இவரின் சேவையை நினைவுகூர்ந்து பாராட்டி உரையாற்றினர் இந்நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
0 Comments