பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசிகாவின் அம்மாவுக்கு நேற்றும் பிணை வழங்காத நிலையில் அம்மாவுக்காக காத்திருந்த விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா அம்மா இன்றிய நிலையில் நடந்தது . தனது பூப்புனித நீராவிட்டு விழாவுக்காக அம்மா பாலேந்திரன் ஜெயக்குமாரியை பிணையில் அனுப்புமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் எழுதியிருந்தாள். இந் நிலையில் விபூசிகாசின் தயார் ஜெயக்குமாரிக்கு நேற்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்திருந்தது. தனது தயார் பூப்பூனித நீராட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த விபூசிகா ஏமாற்றம் அடைந்தாள்.
கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சிஐடியினரால் சேர்க்கப்பட்ட விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா நேற்று இடம்பெற்றுள்ளது. காணாமல் போன தனது அண்ணனை விடுதலை செய்யுமாறு கோரிய விபூசிகா சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்ட்டதுடன் அவளது தயாார் ஜெயக்குமாரி பாலேந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன விபூசிகாவின் சகோதரன் இலங்கை அரசின் புனர்வாழ்வு முகாமில் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றை அவரது தயார் வெளியிட்டு போராட்டங்களில் ஈடுபட்டார்.
0 Comments