பங்களாதேஷ் அணி வீரர் ருபெல் ஹொசெய்ன் மீதான பாலியல் வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது.
இவ் வருட ஆரம்பத்தில் நஸ்னின் அக்தர் ஹெப்பி என்ற நடிகை (19) இம் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.
ருபெல் ஹொசெய்ன் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதுடன் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும் அக்தர் ஹெப்பி முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட ருபெல் ஹொசெய்ன் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
எனினும் உலகக் கிண்ண பங்களாதேஷ் அணியில் இவர் முக்கிய வீரர் என்பதைக் கருத்தில் கொண்டு உலகக் கிண்ணம் முடியும் வரை அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் , இங்கிலாந்து அணியுடனான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றதுடன் இப்போட்டியில் ஹொசெய்ன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். பங்களாதேஷ் அணி காலிறுதிக்கும் தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்தே நஸ்னின் அக்தர் ஹெப்பி தனது முறைப்பாட்டை மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவ் வழக்கை தொடரப்போவதில்லையெனவும் இதன் மூலம் ருபெல் ஹொசெய்ன் மேல் தேவையற்ற அழுத்த த்தைப் பிரயோகிக்க விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments